இன்டோ கிரேக்க , இன்டோ ஸ்கைதிய , இன்டோ பார்த்திய , இன்டோ ஸஸநிட் போன்ற கலப்பு பண்பாடுகள் வட மேற்கு இந்திய துனைகண்டத்தில் காணப்பட்டது.sinids. இன்டோ கிரேக்க கலாசாரம் இன்டோ பாக்ற்றிய மன்னர், டெமெத்ரியஸ் கி.மு. 180 ௦ல் படையெடுத்த போது ஆரம்பித்தது.இது இரண்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்து இருந்தாலும் இதனை ஆண்ட கிரேக்க மன்னர்கள்( ஏறத்தாழ முப்பது) ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டே இருந்தனர்.
இந்திய ஐரோப்பிய சாகா ச்கைத்தியரின் பண்பாட்டின் ஒரு கிளை தான் இன்டோ ச்கைத்திய பண்பாடு. இந்த ஸ்கைதியர்கள் தெற்கு சைபீரியாவிலிருந்து, பாக்ட்ரியா, சொக்டியானா, காஸ்மீர், அரசோசியா, கந்தாரா வழி இந்தியா வந்து சேர்ந்தனர். இவர்களது ராஜ்ஜியம் மத்திய இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முதல் நூற்றாண்டு வரை நீடித்து இருந்தது.

பகலவா என்று அழைக்கப்பட்ட இன்டோ பார்த்தியர்கள் தற்காலத்து ஆப்கனிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தான் பகுதிகளையும் கந்தாரா பகுதியின் குஷான், குசுலா கட்பிசர் போன்ற குறும் மன்னர்களிடமிருந்து போரிட்டுபெற்றனர்.பெர்சியாவை சார்ந்த ஸஸநிட் ராஜ்ஜியம் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்தனர். இவர்கள் தற்கால பாகிஸ்தானில் ஆட்சி செய்ததை நாம் அங்கு இருக்கு பெர்சிய கலாச்சாரத்தின் மூலம் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இதுவே இன்டோ சசானித் கலாச்சாரத்தின் பிறப்பிடம் எனவும் கூறலாம்.