தெற்குப் பகுதியில் களப்பிரர் ஆட்சியை வீழ்த்திய பெருமை பாண்டிய மன்னன் கடுங்கோன் (560–590) என்பவரைச் சாரும். கடுங்கோன் மற்றும் அவரது மகன் மாறவர்மன் அவனிசூளாமணி பாண்டியர்களின் ஆட்சிக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். பாண்டிய மன்னன் சேந்தன் தனது ஆட்சிக் காலத்தில் ஆற்றலை சேர நாடு வரைக்கும் விரிவாக்கினார். இவரது மகன் அரிகேசரி பராந்தக மாறவர்மன் (c. 650–700) நீண்டகாலம் செழிப்பாக ஆட்சி செய்தார். அவன் பல போர்களின் மூலம் பாண்டியர்களின் ஆற்றலை விரிவாக்கினான். பாண்டியர்கள் பண்டைய காலத்திலிருந்தே புகழ்பெற்றவர்கள். பதின்மூன்றாம் நூற்றாண்டில், அப்போதிருந்த பேரரசுகளில் மிகவும் செல்வமிக்க பேரரசு என்று மார்க்கோ போலோ பாண்டிய பேரரசைக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் ரோமன் பேரரசு வரையிலான பரவலான தொடர்புகளுடன் இருந்தனர், அத்தொடர்புகள் அரசியல் நயமிக்கவையாகவும் இருந்தன.
தங்கள் ஆட்சி எல்லையை விரிவாக்கிய பின்னர், சில ஆண்டுகள் கழித்து பல்லவர் ஆட்சிக்கு பல்வேறு இடையூறுகளை பாண்டிய பேரரசு விளைவித்தது. பாண்டிய மன்னர் மாறவர்மன் இராசசிம்மா சாளுக்கியர் மன்னர் இரண்டாம் விகுரமாதிதியனுடன் கூட்டணி வைத்து பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மனைத் தாக்கினர். காவிரிக் கரையில் நடந்த போரில் முதலாம் வரகுனன் பல்லவர்களைத் தோற்கடித்தார். பாண்டியர்களுக்கு அதிகரித்து வரும் ஆற்றலை தடை செய்வதற்காக பல்லவ மன்னர் நந்திவர்மன், கொங்கு மற்றும் சேர நாடுகளின் தலைவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். போர்வீரர்கள் பலமுறைப் போரிட்டுக் கொண்டாலும் இறுதியில் பாண்டிய மன்னர்களின் படையே வெற்றி பெற்றது. பாண்டியர்கள் சுரீமாற சுரீவல்லபா என்பவரின் துணையுடன் இலங்கை மீது படையெடுத்து 840 ஆம் ஆண்டில் வடக்குப் பகுதிகளை அழித்தனர்.

சுரீமாறாவின் துணையுடன் பாண்டியர்களின் ஆட்சி ஆற்றல் தொடர்ந்து வளர்ந்தது. பல்லவர்களின் பல்வேறு பகுதிகள் பாண்டியர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. வடக்கில் தக்காண பீடபூமியின் சாளுக்கியர்களை தோற்கடித்த இராட்டுரகுடாசு அமைப்புகளால் தற்போது பாண்டியர்களுக்கு நெருக்கடி அதிகமானது. கங்கை மற்றும் சோழர்களின் துணையுடன் மூன்றாம் நந்திவர்மன் என்ற அரசனை பல்லவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சுரீமாறாவை தெள்ளாறு போரில் தோற்கடித்தனர். பல்லவர்களின் பேரரசு வைகை ஆறு வரை மீண்டும் நீண்டது. பல்லவ அரசன் நரிபதுங்க என்பவரால் அரிசில் என்ற இடத்தில் பாண்டியர்கள் தோற்கடிக்கப்பட்டனர் (c. 848). பல்லவர்களின் மேலாளுமையை பாண்டியர்கள் பிறகு ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.