இந்த மத்திய காலம் பண்பாடு வளர்ச்சிக்கு பெயர் போன ஒன்றாகும். சதவாகனர்கள் அல்லது ஆந்திரா என்று அழைக்கப்பட்டவர்கள் மத்திய மற்று தென்னிந்திய பகுதிகளை கி.மு. 230 ல் ஆட்சி செய்தனர். சதவாகன சாம்ராஜ்ஜியத்தில் ஆறாவுதாக வந்த சதகர்ணி மன்னர் மேற்கிந்தியாவின் சுங்க சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய பெருமையைப் பெற்றவர் ஆவார். கவுதமிபுத்ர சதகரணி இந்த சாம்ராஜ்ஜியத்தின் மற்றும் ஒரு மேலார்ந்த மன்னர் ஆவார்.
இமாலய பகுதியிலிருந்த குலிந்தப் பேரரசு கி .மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை நிலைத்து இருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் பாதியில் நடு ஆசியாவிலிருந்து வந்த குஷானர்கள் வட மேற்கு இந்தியப் பகுதி மீது படை எடுத்தனர். அவர்களது ராஜ்ஜியம் பெஷாவரிலிருந்து, மத்திய கங்கை பகுதியிலிருந்து மற்றும் வங்காள விரிகுடா வரை இருந்தது.அது பண்டைய பாக்திரியா (மேற்கு ஆப்கனிஸ்தான் பகுதி) மற்றும் தென் தஜகிச்தானத்தையும் தன்னுள் கொண்டிருந்தது. வடக்கு மற்றும் மத்திய இந்திய பகுதியை ஆண்ட சகர்கள், வடக்கு சத்திரப்பதிகளாக கருதப்பட்டனர்.(கி.பி 35-405)இவர்கள் இந்தோ சிதியர்களை அடுத்தும், மேற்கு பகுதியை ஆண்ட குஷானர்களின் மற்றும் தெற்கு பகுதியை ஆண்ட சாதவாகனர்களின் சமகாலத்திலும் வாழ்ந்தனர்.
மேலும் [பாண்டிய ராஜ்ஜியம், சோழ ராஜ்ஜியம், சேர ராஜ்ஜியம், கதம்ப ராஜ்ஜியம், பல்லவ ராஜ்ஜியம், சாளுக்கிய ராஜ்ஜியம் போன்ற பல சாம்ராஜ்ஜியங்களை, தென்னிந்தியாவில் பல கால கட்டங்களில் கொண்டிருந்தது.பல தென்னிந்திய ராஜ்ஜியங்கள் தங்களது எல்லையை கடலுக்கு வெளியேவும் எடுத்து சென்றனர். இது தென் கிழக்கு ஆசியா வரை இருந்தது.இந்த ராஜ்ஜியங்கள் தங்களுக்குள்ளேயும் , மத்திய மாநிலங்களுடன் ஆட்சிக்காக ஏராளமான போர்கள் இட்டன.களப்பிரர் எனும் புத்த ராஜ்ஜியம் தற்காலிகமாக சோழ, சேர பாண்டிய ராஜ்ஜியங்களை தன கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.
0 Comments