1947 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்ற பிறகு மேற்கொண்ட மாநிலங்கள் பங்கீடு தமிழ்நாட்டில் பெரிய அளவில் விளைவை ஏற்படுத்தவில்லை. மதத்தினரிடையே பிரிவினை வாத வன்முறைகள் ஏதுமில்லை. தமிழ்நாட்டில் அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் அமைதியான இணக்க நிலையுடனும் இருந்தனர். 
மதராஸ் மாகாணத்தில் காங்கிரசு கட்சி முதல் அமைச்சரவையை அமைத்தது. சி.ராசகோபாலாச்சாரி (இராஜாஜி) முதல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். மெதராஸ் மாகணாம் என்பது மெதராஸ் மாநிலம் என்று மாற்றியமைக்கப்பட்டது. மெதராஸ் மாநிலத்தில் இருந்த தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று பொட்டி திருராமலு என்பவர் போரட்டம் செய்தார். இந்திய அரசாங்கம் மெதராஸ் மாநிலத்தைப் பிரிப்பது என்று முடிவு செய்தது.

ராயலசீமா மற்றும் அதைச் சுற்றிய ஆந்திரக் கடற்கரைப் பகுதிகள் ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலமாக 1953 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. பெல்லாரி மாவட்டம் மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1956 ஆம் ஆண்டு தெற்கு கன்னடா மாவட்டம் மைசூருக்கு மாற்றப்பட்டது. மலபார் கடற்கரை மாவட்டங்கள் புதிதாக உருவாக்கபட்ட கேரள மாநிலத்தின் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு, மெதராஸ் மாநிலம் தற்போதைய வடிவத்தை எட்டியது. மெதராஸ் மாநிலம் தமிழ்நாடு (தமிழர்கள் வாழும் பகுதி) என்ற பெயருக்கு 1968 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.

இலங்கையில் இனப் பிரிவுச் சார்ந்த சண்டை காரணமாக 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் அதிகமான இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்தனர். தமிழ் அகதிகளின் அவலநிலை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழுச்சியுடன் கூடிய ஆதரவை உண்டாக்கியது. இலங்கை தமிழர்கள் நிலைக் குறித்து இலங்கை அரசிடம் பரிந்துரை செய்யுமாறு தமிழக அரசியல் கட்சிகள் இந்திய அரசாங்கத்திற்கு நெருக்கடி அளித்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) இயக்கத்தை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்காக இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி அனுப்பினார். இதன் காரணமாக 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 அன்று ராஜீவ் காந்தி இலங்கையைச் சேர்ந்த இயக்கத்தினரால் படுகொலைச் செய்யப்பட்டார். அது முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) இயக்கம் தமிழ்நாட்டில் தன் ஆதரவை இழந்தது.

2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை வெகுவாக பாதித்தது. இந்த பேரழிவில் தோராயமாக 8000 மக்கள் உயிரிழந்தனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய மாநிலங்களில் ஆறாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு, பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் 2005 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி ஏழாம் இடத்தில் இருந்தது. திறமை வாய்ந்த பணியாளர்களின் தேவை அதிகரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. 

சாதி வாரியாக 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு தமிழ்நாட்டில் பரவலாக இருந்த உடன்பாடு செயல் காரணமாக மாநிலத்தின் கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. சாதி வாரியாக இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் பெரிய அளவில் ஆதரவு இருந்தது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக குறிப்பிடப்படும் படியான போராட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை.