சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை மூன்று விதமான நிலைகளை அடைந்துள்ளது. 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு இருந்த காங்கிரசு கட்சியின் செல்வாக்கு 1960 ஆம் ஆண்டில் திராவிட கட்சியின் கொள்கைகளால் மாறியது. 1990 ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த நிலை நீடித்திருந்தது. திராவிட அரசியல் கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கூட்டணி அரசாங்கம் அமைக்கும் நிலையை தற்போது கொண்டிருக்கிறது.
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) என்ற கட்சியினை 1949 ஆம் ஆண்டு அண்ணாதுரை தொடங்கினார்.[98] தமிழ்நாட்டில் இந்திக் கலாச்சாரம் திணிக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்து இந்தியாவின் தெற்கு பகுதியை திராவிடர்களுக்கு என்று தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுக விடுத்தது. திராவிட நாடு தனிப்பட்ட மாநிலமாக இருக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. திராவிட நாடு என்பது தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடாக மற்றும் கேரளாவின் பகுதிகளை உள்ளடக்கிய திராவிடர்களின் நாடு என்பதாகும்.
மதராஸ் மாகாணத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு 1950 ஆம் ஆண்டு இறுதி வரை இருந்த ஈடுபாடு மற்றும் 1962 ஆம் ஆண்டில் இந்தியப் பகுதிகளில் சீனாவின் நுழைவு ஆகிய காரணங்கள் உடனடியாக திராவிட நாடு கோரும் கோரிக்கைக்கு இடையூறாக அமைந்தது. இந்திய அரசியலமைப்பில் 1963 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பதினாறாவது சட்டத் திருத்தம் பிரிவினை வாதக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்தது. இதன் காரணமாக திராவிடனுக்கு தனிப்பட்ட நாடு கோரிக்கையை திமுக முழுமையாக நிறுத்திவிட்டு இந்திய அரசியலமைப்பில் செயல்திறன் மிக்க சுயாட்சி கட்சியாக மாறுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தியது.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கிடைத்த மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி சுதந்திரத்திற்கு பின்னர் அரசாங்கத்தை அமைத்த காங்கிரசு கட்சி 1967 ஆம் ஆண்டு வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மாநிலப் பள்ளிகளில் கட்டயாமாக இந்தி மொழியைக் கொண்டு வரும் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து 1965 மற்றும் 1968 ஆம் ஆண்டு நடத்திய போரட்டங்களுக்கு திமுக தலைமை தாங்கியது. வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிலையங்களில் உடனடி செயலாக்கம் போன்றவை தமிழ்நாட்டில் முதன்மையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது திராவிட இயக்கத்தின் கோரிக்கையாக இருந்தது.
அண்ணாதுரை மற்றும் கருணாநிதி போன்ற திராவிட இயக்கத்தின் தலைவர்கள் தங்களிடமிருந்த எழுத்து திறமையைப் பயன்படுத்தி மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலமாக இயக்கத்தின் அரசியல் செய்திகளைப் பரப்பினர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பின்னாளில் பதவியேற்ற எம்.ஜி இராமச்சந்திரன் என்பவரும் நாடகம் மற்றும் திரைப்பட நடிகராவார்.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுக கழகம் இரண்டாக பிளவுபட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக) என்ற கட்சியினை 1971 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் துவங்கினார். இன்று வரை திமுக மற்றும் அஇஅதிமுக இரண்டு கட்சிகளும் தமிழ்நாடு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1977, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அஇஅதிமுக கட்சியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆட்சி செய்தார். கட்சியினருக்கிடையே ஏற்பட்ட பல்வேறு பிரிவுகள் காரணமாக எம்.ஜி.ஆரின் இறப்பிற்கு பின்னர் அஇஅதிமுக பிளவுற்றது. முடிவில் ஜெ.ஜெயலலிதா அஇஅதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றார்.
1990 ஆம் ஆண்டின் பின்பகுதியில் பல்வேறு அரசியல் சமநிலை மாற்றங்கள் தமிழ்நாடு அரசியலில் நிலவின. இறுதியாக திமுக மற்றும் அஇஅதிமுக கட்சிகளுக்கு தமிழ்நாட்டு அரசியலில் இரட்டை முன்னுரிமை அளிக்கப்பட்டது. காங்கிரசு கட்சியில் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட பிளவு தமிழ் மாநில காங்கிரசு என்ற கட்சி உருவாக காரணமானது.
தமாகா கட்சி திமுக கட்சியுடன் கூட்டணியுடனும், திமுக கட்சியிலிருந்து பிரிந்த மற்றொரு கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக) அஇஅதிமுக கட்சியுடனும் கூட்டணியுடன் இருந்தன. பல்வேறு சிறிய கட்சிகள் மக்களிடையே பிரபலமடையத் தொடங்கின. திமுக மற்றும் தமாகா கட்சி 1996 ஆம் ஆண்டு தேசிய பாராளுமன்ற தேர்தலில் வைத்திருந்த கூட்டணியை முறியடிக்கும் விதத்தில் அஇஅதிமுக கட்சி பல்வேறு சிறிய கட்சிகளுடன் இணைந்து 'மிகப்பெரிய கூட்டணியை' உருவாக்கியது. தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பதற்கான முதல் நிகழ்வாக இது இருந்தது. இன்றும் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் போது அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்கின்றன.
காங்கிரசு கட்சியின் தேர்தல் செல்வாக்கு தேசிய அளவில் 1990 ஆம் ஆண்டு முதல் குறைய ஆரம்பித்தது. இதன் காரணமாக தமிழ்நாடு உள்ளிட பல மாநிலங்களில் காங்கிரசு கட்சி கூட்டணி வைத்துள்ளது. இதன் காரணமாக திராவிடக் கட்சிகள் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன.
0 Comments