சுதந்திரம் பற்றிய எண்ணம் நாடு முழுவதும் மேலோங்கி இருந்தது. ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காக பாடுபட தமிழ்நாட்டிலிருந்தும் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் தாமாக முன்வந்தனர். 1904 ஆம் ஆண்டு ஈரோடு அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த திருப்பூர் குமரன் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
ஆங்கிலேயருக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்திய போது குமரன் உயிரிழந்தார். பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சு அரசு பிரித்தானிய காவல்துறையினரிடமிருந்து தப்பித்துக் கொள்ள முயன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இடமளித்து ஆதரவு தந்தது. பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர்களில் 1910 ஆம் ஆண்டு வாழ்ந்த அரவிந்தரும் ஒருவர். அரவிந்தர் காலத்தில் வாழ்ந்தவர்களில் கவிஞர் பாலசுப்ரமணிய பாரதியும் ஒருவர்.
புரட்சிகரமான பாடல்கள் பலவற்றை தமிழில் எழுதியதன் மூலம் சுதந்திரப் புரட்சியை பாரதி ஏற்படுத்தினார். இந்தியா என்ற இதழையும் பாண்டிச்சேரியிலிருந்து பாரதி பிரசுரம் செய்தார். தமிழ் புரட்சியாளர்களான வி.வி.எஸ்.அய்யர் மற்றும் வி.ஒ. சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் அரவிந்தர் மற்றும் பாரதியார் நட்புடன் இருந்தனர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம் (INA), என்ற அமைப்பின் உறுப்பினர்களில் தமிழ்நாட்டிலிருந்து குறிப்பிட்ட உறுப்பினர்கள் இருந்தனர். INA வின் முக்கிய தலைவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமி சேகள் என்பவரும் ஒருவர்.
டாக்டர். டி.எம். நாயர் (Dr. T.M. Nair) மற்றும் ராவ் பகதூர் தியாகராய செட்டி (Rao Bahadur Thygaraya Chetty) ஆகியோர் 1916 ஆம் ஆண்டின் பிராமணன்-அல்ல அறிக்கை (Non-Brahmin Manifesto) மூலம் திராவிட இயக்கத்திற்கான அடித்தளம் அமைத்தனர்.
இரண்டு வகையான இயக்கங்களை மையமாகக் கொண்டு 1920 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வட்டார அரசியல் உருவானது. 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நீதிக் கட்சி இவைகளில் ஒன்று. இந்திய சுதந்திர இயக்கத்தைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல், சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினர் மீது இழைக்கப்படும் கொடுமைகளை நீதிக் கட்சி கருத்தில் கொண்டிருந்தது. மற்றொரு இயக்கம் ஈ.வி.இராமசாமி நாயக்கர் தலைமை வகித்த சமயமற்ற, பிராமணர் அல்லாதவர் சீர்திருத்த இயக்கம்.
1935 ஆம் ஆண்டில் அனைத்திந்திய கூட்டரசு சட்டத்தை ஆங்கிலேய அரசு வெளியிட்டது முதல் தனியாட்சிக்கான முயற்சிகள் 1935 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டன. உள்ளூர் தேர்தல்கள் மீண்டும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் நீதிக் கட்சியை தோற்கடித்து காங்கிரசு கட்சி ஆட்சியைப் பிடித்தது. பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக அறிமுகம் செய்யும் காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்து இராமசாமி நாயக்கர் மற்றும் சி.என்.அண்ணாதுரை இணைந்து 1938 ஆம் ஆண்டில் தங்களது போரட்டத்தைத் தொடங்கினர்.
0 Comments