4 ஆம் மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில் குப்த பேரரசு வட இந்தியாவை ஒன்றுபடுத்தியது. இந்து மதத்தின் மறுமலர்ச்சி பொற்காலமாகக் கருதப்பட்ட இந்த காலத்தில் இந்து பண்பாடு, அறிவியல் அரசியல் அமைப்புகள் வளர்ச்சி அடைந்தன.இந்த பேரரசில் மிகவும் பிரபலமானவர்கள்:முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர் மற்றும் இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் முதலாம் குமாரகுப்தர் காலத்தில் பழமைவாய்ந்த புராணங்கள் எழுதப்பட்டது என்றும் கூறுவர்.

மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஹூணர்களின் படையெடுப்பின் காரணமாக இந்த குப்த சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. 6 ஆம் நூற்றாண்டில், இந்த பேரரசின் முடிவுக்கு பின்னர் இந்தியாவில் மேலும் பல குறுநில மன்ன்னர்கள் ஆண்டனர்.இந்த அரசு உருக்குலைந்த பின்னரும் குப்த குலத்தை சேர்ந்த ஒரு சிலர் மகத நாட்டை ஆட்சி செய்தனர். இறுதியாக இந்த குலத்தை வென்றவர் ஹர்ஷவர்தனர் . இவர் தனது ராஜ்ஜியத்தை 7 ஆம் நூற்றாண்டின் பாதியில் துவக்கினார்.
ஹெப்தலைட்டுகள் குழுவை சார்ந்த வெள்ளை நிற ஹூணர்கள், 5 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஆப்கனிஸ்தானில் உள்ள பாமியான் என்ற தலைநகரை கொண்டு ஆட்சிசெய்தனர். இவர்கள் குப்தர்கள் சாம்ராஜ்ஜியம் குலைய காரணமாக இருந்ததால் இவர்களே பொற்காலத்தின் முடிவுக்கும் கரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.என்ன இருந்தாலும் இந்த சர்ச்சைகள் தென்னிந்திய பகுதியையும், டெக்கான் பகுதியையும் எள் அளவும் பாதிக்கவில்லை.
0 Comments