Subscribe Us

header ads

தமிழக வரலாறு - புதிய கற்காலம்

தமிழ்நாட்டில் சுமார் கி.மு 2500 ஆண்டு புதிய கற்காலம் தொடங்கியது. சாணைபிடித்தல் மற்றும் மெருகேற்றல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி புதிய கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தங்கள் கற்கருவிகளுக்கு நயமான வடிவம் அளித்தனர். பண்டைய எழுத்துக்களைக் கொண்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரியின் மேற்பகுதி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய கற்கால மனிதர்கள் பெரும்பாலும் சிறிய சமதளமான மலைகள் அல்லது மலையின் அடிவாரத்தில், சிறிய, ஏறத்தாழ நிரந்தரமான குடியிருப்புகளில் வாழ்ந்தனர். மேய்ச்சல் காரணங்களுக்காக அவ்வப்போது அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்தனர். அவர்கள் இறந்தவர்களை பள்ளங்கள் அல்லது புதைகலங்களில் புதைத்து சடங்குகளை முறையாகச் செய்தனர். அவர்கள் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உருவாக்க தாமிரத்தைப் பயன்படுத்தவும் தொடங்கினர்.

Post a Comment

0 Comments