Subscribe Us

header ads

தமிழக வரலாறு - இரும்புக் காலம்

இரும்பைப் பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் கருவிகளை வடிவமைக்கும் முறையை மனிதர்கள் இரும்புக் காலத்தின் போது தொடங்கினர். பல நூறு இடங்களில் காணப்படும் பெருங்கற்களாலான இடுகாடுகளைக் கொண்டு தீபகற்ப இந்தியாவில் இரும்புக் காலக் கலாச்சாரம் இருந்ததை அறிய முடிகிறது. இடுகாடு நினைவுச் சின்னங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு மற்றும் அவற்றின் வகைகளைக் கொண்டு வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு இரும்புக் கால குடியேற்றங்கள் பரவியதாகத் தெரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளை ஒப்பிடும் போது பெருங்கற்களாலான குடியேற்றங்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்தன.
சுமார் கி.மு 1000 வது ஆண்டைச் சேர்ந்த பெருங்கற்களாலான புதைகல இடுகாடுகள் இருந்ததற்கான தெளிவான முற்கால அடையாளங்கள் இடுகாடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன, குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பூமியிலிருந்து 157 புதைகலங்களை அகழ்ந்தெடுத்தனர். அவற்றில் 15 கலங்களில் மனிதனின் மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் மற்றும் மற்றும் எலும்புகள், உமி, அரிசி தானியங்கள், கருகிய அரிசி மற்றும் புதிய கற்கால கோடரிக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருந்தன. கண்டெடுக்கப்பட்டுள்ள புதைகலத்தில் எழுத்தப்பட்ட எழுத்துகள், 2800 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தின் தமிழ்-பிராமி வரிவடிவத்தை ஒத்திருப்பதாக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து அகழ்வாய்வு சோதனைகளை மேற்கொள்ளுவதற்கான தொல்லியல் களமாக ஆதிச்சநல்லூர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொதுவான காலத்திற்கு முந்தைய தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றிய குறிப்புகள், கி.மு 300 ஆண்டைச் சேர்ந்த அசோகரின் சாசனத்திலும் கி.மு 150 ஆண்டைச் சேர்ந்த கதிகும்பா கல்வெட்டிலும் (ஓரளவு) கண்டறியப்பட்டுள்ளது. மிகப் பழைய வட்டெழுத்து ரீதியான சான்றில் தமிழ் நாட்டில் இருந்த ஆட்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, அதில் பாண்டிய நாட்டிலிருந்து களப்பிரர்களை வெளியேற்றிய பாண்டிய அரசன் கடுங்கோன் (c.560–590 CE) என்பவனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது -

Post a Comment

0 Comments