ஆங்கில அரசு முகமதிய ஆட்சியையும் அது ஏற்படுத்திய அழிவுகளையும் முனைந்து பயின்று இந்து முஸ்லீம்களுக் கிடையேயான பிரச்சனைகளை முக்கியத்துவப்படுத்திக் காட்டுவதன் மூலம் இஸ்லாமிற்கு எதிரான அமைதியான கிறித்துவக் கொள்கையாக தனது காலனீய ஆட்சியைக் காட்ட முயன்றது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மதத்தைத் தவிர பல காரணிகள் ஆட்சியைத் தீர்மானித்ததால், ஆராயும் வரலாற்றறிஞர்கள் ’இந்து ஆட்சி’, ’முகமதிய ஆட்சி’ என்று குறிப்பிடும் முறையை ஏற்பதில்லை.
இந்த விதத்தில் இந்திய விடுதலை இயக்கம் நடந்த அதே சமயத்திலேயே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடுவே பிரச்சனைகளும் வளர்த்தெடுக்கப்பட்டன.1915 ல் மோகன்தாஸ் கரம்சந்து காந்தி இருதரப்பினருக்கும் இடையே ஒற்றுமையைக் கொண்டுவர பாடுபட்டார். ஆங்கிலேயர்கள் "இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்", என்று வாக்களித்தனர்.
இந்தியாவின் அனைத்து பகுதிகளும் 1947 ல் சுதந்திரம் பெற்றன. பிரித்தானிய இந்தியாவை பாகிஸ்தான் மற்றும் இந்தியா என பிரிக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பின், பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் பிரிவினைக்கு முன்னர் மற்றும் ஒரு கலவரம் இந்துக்களுக்கும், சீக்கியருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மூண்டது. இது இந்தியாவின் பெரும்பகுதிகளில் அதாவது பஞ்சாப், வங்காளம் மற்றும் டில்லியில் நடந்தது. இதில் கிட்டத்தட்ட 500,000 மக்கள் இறந்தனர்.
இதே சமயத்தில் வரலாறே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய மக்கள் குடியேற்றம் நடந்தது. இதில் 12 மில்லியன் இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் புதிதாய் உருவான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தனர்.
0 Comments