பிரிடிஷ் வைஸ்ராய்க்கு அறிவுரை கூற இந்திய கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டனர். இதுவே இந்திய சுதந்திரத்துக்கும் வடக்கு முறை குடியரசுக்கும் முதல் படியாக இருந்தது. மாநிலவாரியான கவுன்சில்களில் நியமிக்கப்பட்டதன மூலம் கவுன்சிலர்கள் சட்டம் இயற்றுகிற கவுன்சில்களிலும் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டனர்.
1920 இலிருந்து மோகன்தாசு கரம்சந்த் காந்தி போன்ற தலைவர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான மக்கள் இயக்கங்களை துவக்கி பாடுபட்டனர்.ஆங்கிலேயரை எதிர்த்து படைகளை சேர்த்தார் சுபாஷ் சந்திர போஸ் என்ற மாபெரும் சுதந்திரப் போராட்டத் தலைவர்.பகத் சிங் என்ற மற்றும் ஒரு சுதந்திரப் போராட்டத் தலைவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புரட்சிகள் ஏற்படுத்த காரணமாக இருந்தார். அவர் ஷகீத் பகத் சிங் என்று அழைக்கபடுகிறார்.
ஷகீத் என்றால் கொள்கைவாதி என்று பொருள்.முதல் விடுதலை போராட்ட வீரர் கட்டலங்குளம் வீரன் அழகுமுத்து கோன் வரியைக் கட்ட மறுத்து ஆங்கிலேய தளபதியான கான்சாகிப் எதிர்த்து போரிட்டு அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்.அவர் சிந்திய ரத்தமே இந்திய விடுதலை போராட்டதிற்கு வித்திட்டது. சுதந்திர போராட்ட வீரரில் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர்.ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியா சுதந்திரத்துக்கான புரட்சி இயக்கத்தின் செயல்பாடுகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் நடைபெற்றன. இந்த இயக்கங்கள் அனைத்தும் 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற உறுதுணையாக இருந்தன.
0 Comments