15 ஆகஸ்ட் 1947அன்று இந்திய விடுதலைக்குப் பின் பிரதம அமைச்சர் ஜவகர்லால் நேரு தலைமையில் முதல் இந்திய அரசு உருவானது. 26 சனவரி 1950இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான அதே நாளில் இந்தியா குடியரசு நாடானது.
1951-1952ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்ற முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. வல்லபாய் படேலின் பெரு முயற்சியால் 562 மன்னராட்சி நாடுகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக மாற்றி அமைக்கப்பட்டது.
இந்திய விடுதலைப் பின்னர் ஜனவரி 30, 1948 ஆம் தேதி இந்தியாவின் தேசப்பிதா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
0 Comments