12 மற்றும் 13 ஆம் நூறாண்டுகளில் துருக்கியர்கள் மற்றும் பாஷ்டுன்கள் ராஜபுதர்களின் கைகளில் இருந்த மேற்கிந்தியாவின் மீது படையெடுத்து டில்லி சுல்தான்களாக மாறினர். அதன் பிறகு வந்த டில்லியை சார்ந்த அடிமை அரச மரபுமேற்கிந்தியாவின் பெரும்பகுதியை குப்தர்கள் போலவே கைப்பற்றியது. அனால்கில்ஜி அரச மரபுமத்திய இந்தியாவில் கைப்பற்றி இருந்தாலும் அவர்களால் இந்த பக்டுதியை ஒன்று படுத்தி கட்டிக் காக்க இயலவில்லை.
இந்திய கலாச்சாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சுல்தானியம்.இந்த இந்திய இஸ்லாமிய கலாசாரங்களின் கலப்பு கட்டிடக் கலை, இசை, மதம். உடைகளில் அழியாத மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.நாடோடி இனம் அல்லது முகாம் என்ற பொருளை கொண்ட உருது மொழி (துருக்கிய மொழியில்) டில்லி சுல்தான்கள் காலில் பிறந்தது. இது சமஸ்க்ருத பிரகிருத்தி பெர்சியா, துருக்கி, அரபு மொழியுடன் கலந்ததால் ஏற்பட்டது. டில்லி சுல்தானியும் பெண் ஆட்சியாளரை நியமித்த ஒரு சில ராஜ்ஜியன்களுள் ஒன்று. இது ரசியா சுல்தானை ஆட்சியில் அமர்த்தியது.

1398 ஆண்டில் துருக்க மங்கோலிய அரசர் தைமூர் டில்லியை சார்ந்த துக்ளக் அரச மரப மன்னரான சுல்தான் நசீருதீன் முஹம்மதின் ஆட்சியை பிடிக்க முனைப்புடன் செயல் பட்டார். சுல்தான் டிசம்பர் 17, 1398 அன்று தோல்வியுற்றார். தைமூர் டில்லியை அடைந்த பின் அதனை கொள்ளையடித்து, அழித்து, துயரமான நிலையில் விட்டுச் சென்றார்.