1526 ல் தைமூரிலிருந்து தைமூர் மற்றும் செங்கிஸ்கான் வம்சவழி வந்த பபூர், கைபர் பாசின் வழி வந்து முகலாய சாம்ராஜ்ஜியத்தை அமைத்தார். இது இரு நூறு ஆண்டுகளுக்கு நீடித்து இருந்தது. 1600 களில் முகலாய அரச மரபு இந்திய துணைகண்டத்தின் முக்காவாசி பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தது.
1707 க்கு பிறகு அது தன வல்லாண்மையை இழக்கத் துவங்கியது. அது 1857 இந்திய சுதந்திரப் போர் அல்லது 1857 இந்திய புரட்சி காரணமாக முற்றிலும் தொலைந்து போனது.இந்த காலம் இந்திய வரலாற்றில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்து மக்கள் முகலாய பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட காலம் இது.

பெரும்பாலான இஸ்லாமிய மன்னர்கள் இந்து மதத்தையும் அதனது கலாச்சாரத்தையும் ஆதரித்தனர்.பபுரின் பேரரான அக்பர் இந்துக்களுடன் நல்லுறவை ஏற்படுத்த முனைப்பட்டார்.ஆயினும் பின்னர் வந்த அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் இஸ்லாமிய ஆதிக்கத்தை திணித்தனர். இதனால் பல கோவில்கள் அழிக்கப்பட்டன.

இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் பெரும் வரிகளைக் கட்டினர்.மவுரிய சாம்ராஜ்ஜியத்தைப்போல பரந்த எல்லைப்பரப்பை கொண்டிருந்த முகலாய சாம்ராஜ்ஜியம் வலுவை இழந்தவுடன் அதனை ஈடுகட்ட சிறு சிறு ராஜ்ஜியங்கள் வரத் துவங்கின.செல்வசெழிப்புடன் இருந்த அரச மரபாக முகலாய சாம்ராஜ்ஜியம் திகழ்ந்தது. 1739 ல்,நதேர் ஷா முகலாய படையை கர்னல் போரில் வீழ்த்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து நதேர் ஷா தில்லியைக் கைப்பற்றி அதனுள் இருந்த செல்வத்தை தன்பால் எடுத்துச் சென்றார். அதில் மயில் சிம்மாசனமும் ஒன்றாகும்.

முகலாய காலத்தில் உச்சக் கட்டத்தில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் அமைப்புகள் மிகவும் வலிமையாக இருந்தன, அதன் பின்னர் வலுவிழந்த இந்த முகலாயர்களை வீழ்த்த மராத்திய ராஜ்ஜியங்கள் வீரியம் கொண்டன. முகலாயர்கள் இந்திய கலாச்சாரத்துடன் ஒன்று கூடி செயல்பட்டதே அவர்கள் நீண்ட காலம் ஆட்சி புரிந்ததன் ரகசியமாகும். இந்த ரகசியத்தை டில்லியின் சுல்தான்கள் அறியாததால் அவர்கள் வெகு விரைவில் ஆட்சியை இழந்தனர்.
இந்த கொள்கையை பெரிதும் மதித்து செயல் பட்டவர் பேரரசர் அக்பர் ஆவார்.சமண மதம் தழைத்து இருந்த அந்த காலத்தில் அக்பர் அமரி என்ற ஒன்றை அமல் படுத்தினார்.இந்து விலங்குகளை கொல்லக்கூடாது என்ற சட்டமாகும்.அவர் ஜசியா என்ற வரியை ரத்து செய்தார் (முஸ்லிம் அல்லாதவர்களுக்கு). முகல்லாய மன்னர்கள் இந்திய மன்னர்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர், இந்திய ராணிகளை மணந்து கொண்டனர், அவர்கள் தங்களது துருக்கிய பெர்சிய கலாச்சாரத்தை இந்திய முறைகளுடன் இணைத்து இந்தோ-சாராசெனிக் கட்டிடக் கலையை உண்டாக்கினார்கள்.

இந்த வழி முறையை மறந்த நிலையிலும், இஸ்லாமிய ஆதிக்கமும், மக்களை கொடுமைப்படுத்துதலும் ஒன்று சேர்ந்து அவுரங்கசீபின் காலத்திக்கு பிறகு இந்த சாம்ராஜ்ஜியம் வலு இழக்க காரணமாக இருந்தது. அவுரங்கசீப் மற்ற அரசர்களைப் போல் அல்லாது பொதுமக்கள் பெரிதும் விரும்பாத பல கொள்கைகளை கையாண்டார்.