இந்தியாவின் வட தோழமை நாடான பெர்சியாவின் மீது ஆரபியர்கள் படையெடுத்த போது, நாகரிகத்தையும், வைர சுரங்கங்களையும், வெளிநாட்டு வாணிகத்திலும் செழித்தோங்கிய இந்தியாவையும் அவர்கள் கண்ணிட்டனர்.
ஒரு சிறிய காலத்திற்கு போராட்டங்கள் இருந்தாலும் மேற்கிந்தியாவை இஸ்லாமிய சுல்தான்கள் கைப்பற்றினர். நாளடைவில் மேற்கு துணை கண்டத்தையும் தங்களது வசம் கொண்டுவந்தனர்.ஆனால் துருக்கியரின் படையெடுப்புக்கு முன்னர் இஸ்லாமியர்கள் இந்திய கடலோர பகுதிகளுடன் வாணிகம் கொண்டிருந்தனர். முக்கியமாக ச்ல்லவேண்டும் என்றால் அவர்கள் இந்து மகா சமுத்திரம் வழி அராபியாவிலிருந்து கேரளா வந்தனர்.

இதனால் ஆபிரகாமிய மத்திய கிழக்கு மதம் எழுந்தது. இது தென்னிந்தியாவில் புனிதமாகக் கருதப்பட்ட இந்து தருமங்களிலிருந்து வேறு பட்டிருந்தது.பின்பு பாமினி சுல்தான்களும் டெக்கான் சுல்தான்களும் தென்னிந்தியாவில் செழிப்புடன் இருந்தனர்.