நூற்றாண்டுகள் வரை இருந்த பல்லவர்கள் மற்றும் சோழர்களின் ஆதிக்கம் சடாவர்மன் சுந்தர பாண்டியன் என்ற பாண்டிய மன்னனால் மாற்றப்பட்டு, 1251 ஆம் ஆண்டு முதல் பாண்டியர்களின் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. கோதாவரி ஆற்றின் கரைகளிலிருந்த தெலுங்கு பேசும் நாடுகள் முதல் இலங்கையின் வடக்குப் பகுதியின் பாதியளவு வரை பாண்டியர்கள் ஆதிக்கத்தில் வந்தது. 1308 ஆம் ஆண்டில் முதலாம் மறவர்மன் குலசேகர பாண்டியன் இறந்த பிறகு ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது என்று அவரின் மகன்களுக்கிடையே போட்டி ஏற்பட்டது.
சட்டப்படி வாரிசான சுந்தர பாண்டியன் மற்றும் சட்டப்படி வாரிசல்லாத வீர பாண்டியன் (அரசனால் பரிந்துரை செய்யப்பட்டவர்) ஆகியோர் ஆட்சிப் பொறுப்பிற்காக சண்டையிட்டுக் கொண்டனர். பின்னாளில் தில்லி சுல்தானகத்தின் படையெடுப்பு காரணமாக மதுரை தில்லி சுல்தானகத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு மாறியது (சுந்தர பாண்டியனின் வெற்றிக் காலங்களில் பாதுகாப்பு அரணாக மதுரை இருந்தது).