தில்லி சுல்தானகத்தின் அலாவுதீன் கில்ஜி என்பவரின் தளபதி மாலிக் காஃபூர் 1311 ஆம் ஆண்டு மதுரை மீது படையெடுத்து மதுரையைக் கைப்பற்றினார். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள சிறிய பகுதிகளை பாண்டியர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் சிறிது காலம் ஆட்சி செய்தனர். குலசேகர பாண்டியனின் சேர இராணுவத் தளபதியான ரவிவர்மன் குலசேகரன் (1299–1314) பாண்டிய ஆட்சியை தனது உரிமையாக்கிக் கொண்டான்.
நாட்டின் உறுதியற்ற நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தென் தமிழகம் முழுவதையும் படையெடுத்து கன்னியாகுமரி முதல் காஞ்சிபுரம் வரையிலான பகுதிகள் அனைத்தையும் சேர பேரரசின் கீழ் இரவிவர்மன் குலசேகரன் கொண்டு வந்தார். சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லி என்ற இடத்தில் இவர் பற்றிய கல்வெட்டு கண்டு எடுக்கப்பட்டது.
0 Comments