வாஸ்கோ ட காமா 1498 ல் கடல் வழியே இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்தார்.இதனால் இந்திய ஐரோப்பிய வாணிகம் வளர்ச்சியடைந்தது. போர்ட்யுகல் மக்கள் கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பேவில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர்.இவர்களையடுத்து டச், ஆங்கிலேயர்கள் வாணிக முகாம்களை சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர்.
1619-ல் பிரெஞ்சு காரர்களும் அவர்களை பின் தொடர்ந்தனர்.உள்ளுக்குளே நடந்த போர்களும், குழப்பங்களும் ஐரோப்பியர் தேடிக்கொண்டிருந்த நுழைவு வாயிலாக அமைந்தன. இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தனர்.மற்ற எல்லா ஐரோப்பியா நாடுகளும் தங்களது வசம் இருந்த பகுதிகளை ஆங்கிலேயரிடம் நாளடைவில், அதாவது இந்த ஒரே நூற்றாண்டில் இழந்தனர். இதற்கு விதிவிலக்காக பிரெஞ்சு நாட்டவர்களின் பாண்டிசெரி, சந்தேர்நாகூர் மற்றும் டச்சின் ட்ராவனகொர் துறைமுகமும், மற்றும் போர்ட்யுகல் நாட்டினரின் கோவா, டாமன், டியூ இருந்தன.