பண்டைய தமிழகத்தை ஆட்சிபுரிந்த 3 பேரரசுகளில் சேர பேரரசு ஒன்றாகும். தற்போதைய கேரளாவின் பெரும்பான்மையான பகுதிகள்,தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் கொண்ட பகுதி சேர பேரரசு ஆகும். முக்கிய துறைமுகம் முசிறி ஆகும். முதல் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து முசிறி துறைமுகம் வழியாக உரோமை நாட்டுடன் வணிக தொடர்பு சிறப்பாக நடந்ததாக மார்க்கோ போலோ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சோழ பேரரசில் குறிப்பிட தக்க அரசர்களில் முக்கியமானவர்கள் இருவர், 1. ராஜராஜ சோழன் , 2. ராஜேந்திர சோழன் . இவர்களுடைய ஆட்சி காலத்தில் சோழ பேரரசு பறந்து விரிந்து காணப்பட்டது .சோழர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகர் என்னும் புலவரால் கருதப்பட்டது.
சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்பட்டாலும் இது மரபு வழிச்செய்தியே தவிர வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.
0 Comments