இந்திய துணைகண்டத்தின் பெரும்பாலான வட மேற்கு பகுதிகள் (தற்பொழுதைய கிழக்கு ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்) பெர்சிய அகய்மேனிட் சம்ராஜ்ஜியாதின் போது டாரியஸ் தி கிரேட் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. (கி.மு. 520 ல்). அதற்கு பிறகும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு அதே சாம்ராஜ்ஜியம் நிலைத்து இருந்தது. கி.மு. 326 ல் அலேக்சாண்டேர் ஆசியா மைனரை கைப்பற்றினார்.
அத்துடன் அகைமேனிட் சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சி இந்திய துணைகண்டத்தின் வட மேற்கு பகுதிகளில் ஒரு முடிவுக்கு வந்தது.அலேக்சாண்டேர் புரு மன்னனை ஹைடாச்பெஸ் போர்களத்தில் (இன்றைய பாகிஸ்தானின் ஜீலத்திற்கு அருகே) வீழ்த்தி பஞ்சாபை கைப்பற்றினார். பின்னர் அவர் கிழக்கு திசையில் சென்று நந்தர்கள் சாம்ராஜ்ஜியம், மகத நாடு மற்றும் வங்காளத்தின் கங்காரிடை சாம்ராஜ்ஜியத்தை ஒடுக்கினார். அவரது படைகள் மேலும் பலத்த இந்திய படைகளை காலத்தில் சந்திக்க பயந்து போரை ஹைபாசிஸ் (இன்றைய பீஅஸ்) என்ற இடத்தில் கங்கை நதி கரையோரம் புறக்கணித்தது.அலேக்சாண்டேர் தனது தளபதி கொயினசுடன் பேசிய பிறகு, திரும்பி செல்ல முடிவெடுத்தார்.

இந்த பெர்சிய மற்றும் கிரேக்க படையெடுப்புகள் இந்திய நாகரிகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.பெர்சிய நாட்டின் அரசியல் அமைப்புகள், இந்த துணை கண்டத்தில் மவுரியா சாம்ராஜ்ஜியத்தில் தென்பட்டன.காந்தார( இன்றைய கிழக்கு ஆப்கனிஸ்தான் மற்றும் வட மேற்கு பாகிஸ்தான் பகுதிகள்) என்னும் இடம் இந்திய, பெர்சிய, மத்திய ஆசிய மற்றும் கிரேக்க பண்பாடுகளின் உறைவிடமாக திகழ்ந்தது. இது கிரேக்க புத்த மதம் போற கலவையான பண்பாடுகளை உருவாக்கிற்று. இந்த வகையான மகாயான புத்த மதம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.