வேதா காலத்தின் இறுதிக் காலகட்டத்தில் இந்திய துணை கண்டத்தில் நிறைய சிறு ராஜ்ஜியங்களும், நகர மண்டலங்களும் வரத் துவங்கின என்று பல இந்து, புத்த, சமண மத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.கி.மு. 600 ஆம் ஆண்டில், பதினாறு முடியாட்சிகளும் மற்றும் மகாஜனபதங்கள் என்று அழைக்கப்பட்ட குடியரசும் தோன்றியன.
இந்த மகாஜனபதத்தில் அங்கம், கோசலை, காசி, மகதம், வஜ்ஜி, மல்லம், சேதி, வத்சம், குரு,பாஞ்சாலம், மத்சம், சூரசேனம், அஸ்மகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம் இருந்தன. இந்த ஜனபதங்கள் சிந்து-கங்கைச் சமவெளியில் இன்றைய ஆப்கனிஸ்தானிலிருந்து, வட இந்தியா மற்றும் மத்திய இந்தியா வரை பரவி இருந்தன. இந்தியாவை நகரப்படுத்தி பார்த்ததில் இந்து சமவெளி நாகரிகத்துக்கு பிறகு வேத காலமே அடுத்த இடத்தை பிடிக்கிறது. ஆரம்பகால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பல குலங்கள் துணைக்கண்டத்தின் இந்த பகுதியில் காணப்பட்டன. இதில் சில அரசர்கள் வழி வழியாய் வந்தனர், மேலும் சிலர் அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப் பட்டனர். படித்தவர் சமஸ்க்ருதத்தில் பேசுகையில், மேற்கிந்தியாவின் பொது மக்கள் பிரக்ரித்தி மற்றும் பாலி மொழியில் பேசினார். கி.மு.500/400 ல்,சித்தார்த்த கவுத்தமர் காலத்திலேயே இந்த பதினாறு ராஜியங்களும் ஒன்று கூடி நான்கு பெரும் அரசுகளாக உருமாறின.அவை வட்சா,அவந்தி,கோசலா,மகதா ஆகும்.
இந்து மதப்படி செய்த சடங்குகள் எளிதானவையாக இல்லாததால் குரு குலத்தை சேர்ந்தவர்கள் அவற்றை செய்தனர். தத்துவங்களைப் புகட்டும் உபநிசதங்கள் பிற்கால வேத காலத்திலும் மகாஜனப்பதங்களின் ஆரம்ப காலத்திலும் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. (அதாவது கி.மு. 600 இலிருந்து 400 வரை). இந்திய தத்துவங்களில் தனது ஆதிக்கத்தை கொண்டிருந்த உபநிடதங்கள், பௌத்தம் மற்றும் சமண மதங்களும் வித்திட்டது. இது சிந்தனைக்கான பொற்காலமாகக் கருதப்பட்டது.
கி.மு 537 ல், கௌதம புத்தர் போதி நிலையை அடைந்து ஞானம் பெற்றவராகக் கருதப்பட்டதால் அவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார்.அதே சமயத்தில் சமண சமயத்தின் 24 வது தீர்த்தங்கரரான) மகாவீரர் புத்த மதத்தை போல் இருந்த மற்றும் ஒரு சமயத்தை கோட்படுத்தினார். அதை மக்கள் சமண மதம் என்று அழைத்தனர். வேதங்களிலும் ஒரு சில தீர்த்தங்கர்களை பற்றிய குறிப்புடன் ஸ்ரமண இயக்கத்தின் முனிகளின் ஒழுங்கமைவு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தரின் பிரச்சாரங்கள் மற்றும் சமண மதத்தின் கோட்பாடுகள் துறவறம் பற்றி பிரக்ரிதி மொழி கொண்டு மக்களிடம் கொண்டு சேர்த்தன. இந்து மதத்துடனும், ஆன்மீக கோட்பாடுகளுடனும் தொடர்பு கொண்டிருந்த இந்த இரு சமயங்களும், சைவ உணவமைப்பு பற்றியும், விலங்குகளிடத்தில் கருணைகாட்டுதல் பற்றியும், அஹிம்சா வழி பற்றியும் கூறுகின்றன.
சமண மதம் இந்தியாவுக்குள் இருக்கையில் புத்த மதத்தின் துறவியர்கள் நாடு கடந்து சென்று மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா, திபெத், இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியாப் பகுதிகளில் புத்த மதத்தைப் பரப்பினர்.
0 Comments