ஹோமோ எரெக்டஸின் தனிமைப்படுத்தப்பட்ட மிச்சங்கள் மத்திய இந்தியப் பகுதியில் உள்ள நர்மதா சமவெளியில் கண்டெடுக்கப்பட்டன. இது பனி உறைந்திந்திருந்த மத்திய பிளைச்டோசீன் காலத்திலேயே அதாவது 200,000 இலிருந்து 500,000 ஆண்டுகளுக்கு நடுவே பரிணாமம் அடைந்த உயிரினங்கள் வாழ்ந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றது.
ஆனால், இந்து மகா சமுத்திரக் கரையோரம் இருந்த ஆப்பிரிக்க இடப்பெயர்ப்பின் அடையாளங்கள் சுவடே இல்லாமல் இருப்பதால் அவை தொலைந்ததாகவே கருதப்படுகின்றறன. 25,000 த்திலிருந்து 30,000 ஆண்டு காலம் வரை மத்தியக் கற்காலம் இந்த துணைக் கண்டத்தில் நீடித்திருந்தது. இன்னும் விரிவான குடியேற்றங்கள் இந்தத் துணைக் கண்டத்தில் பனியுரை காலத்தின் இறுதிக் கட்டங்களில் அதாவது ஏறத்தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தன என்று யூகிக்கப் படுகிறது. நிச்சயமாகச் சொல்லக்கூடிய நிலையான குடியேற்றங்கள் 9000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த ஆதாரங்கள் தற்கால மத்தியப் பிரதேசத்தில், பீம்பேட்கா பாறை வாழிடங்கள் என்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன.
பாகிஸ்தானில் உள்ள தற்கால பலுசிஸ்தானில் இருந்த மெஹெர்கர் கண்டுபிடிப்புகள் தென்னாசியாவில், புதிய கற்காலத்தின் ஆரம்ப காலப் பண்பாட்டைக் குறிக்கின்றன. இது சுமார் கிமு 7000 ஆண்டுக்குமுன் இருந்தது என்று கணக்கிடப்படுகிறது. இந்தப் புதிய கற்காலம் இருந்தது என்பதற்கான தடையங்கள் காம்பத் வளைகுடாவில் மூழ்கி இருந்தாலும், அதனையும் கண்டு பிடித்துள்ளனர். கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு இதனை கி.மு 7500 ஆண்டு என்று கணக்கிட்டுள்ளது. புதிய கற்காலம் முடிவுக்கு வரும் காலத்தில் இருந்த பண்பாடு கி.மு. 6000 - 2000 ஆண்டுகளில் இந்து சமவெளி நாகரிகத்தில் இருந்ததாகவும், தென்னிந்தியாவில் கிமு 2800 - 1200 ஆண்டுகளில் இருந்ததாகவும் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.
துணைக் கண்டத்தின் இந்த பகுதியில் இரண்டு மில்லியன் ஆண்டுக்லங்களாக மக்கள் வசித்து வருகின்றனர். இது தற்காலப் பாகிஸ்தான் பகுதியில் உள்ளது. இந்தப் பகுதியின் பழைமையான வரலாறு, இப்பகுதி தென்னாசியாவின் மிகப் பழைமையான குடியேற்றங்களையும். தென்னாசியாவில் ஆரம்பகாலங்களில் கண்டு பிடிக்கப்பட்ட தொல்பொருள் இடங்களில் பழைய கற்காலத்தில் சொவன் நதிக்கரையோரம் இருந்த ஹோமொனிட் புரயிடமும் ஒன்று.[35] கிராம வாசிப்பு வாழ்க்கையை மேர்கர்ஹில் உள்ள புதிய கற்காலத்தின் புரயிடங்கள் காட்டுகின்றன.
சிந்து சமவெளி நாகரிகம்[37] போல வளர்ச்சியடைந்த நகர வாழ்க்கையைக் காட்டும் நாகரிகங்கள் மொகேன்ஜதாரோ, லோத்தல், ஹரப்பா, காளிபங்கான், தோலாவிரா போன்ற இடங்களில் இருந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன.
0 Comments