சிந்து சமவெளி நாகரிகத்தின் ஆரம்பகாலங்களில், கிமு 3300-ஆம் ஆண்டில் வெண்கலக் காலம் இந்தியத் துணைக் கண்டத்தில் துவங்கியது. இது சிந்து நதி மற்றும் அதன் கிளைகளை ஆதாரமாகக் கொண்டிடிருந்தது. மேலும் கக்கர்-ஹக்ரா சமவெளி, கங்கா-யமுனா, டோப், குஜராத், மற்றும் மேற்கு ஆப்கனிஸ்தான்பகுதிகளிலும் இது தழைத்து இருந்தது.
இந்த நாகரிகம் பெரும்பாலும் இன்றைய இந்தியாவைச்சேர்ந்த (குஜராத், ஹரியானா, பஞ்சாப் ராஜஸ்தான் பகுதிகளிலும்) மற்றும் இன்றையப் பாகிஸ்தானைச் சேர்ந்த (சிந்து, பஞ்சாப், பலோசிஸ்தான் பகுதிகளில்) நிறைந்திருந்தது. வரலாற்றைச் சார்ந்து பார்க்கும் பொது பண்டைய இந்தியா, மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து போல உலகிலேயே பழமை வாய்ந்த நகர நாகரிகத்தைக் கொண்டிருந்தது. சிந்து நதி சமவெளியில் வாழ்ந்த மக்கள் ஹரப்பர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் உலோகத்தைக்கொண்டு பலவற்றையும் தயாரிக்க புதுப் புது முறைகளைக் கண்டறிந்தனர். மேலும், அவர்கள் செம்பு, வெண்கலம், ஈயம், தகரம் போன்றவற்றையும் உற்பத்தி செய்தனர்.

கி.மு. 2600 - 1900 ஆண்டுகளை செழிப்பாக இருந்த சிந்து சமவெளி நாகரிகம் இந்த துணை கண்டத்தில், நகர வாழ்க்கை நாகரிகத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது.இன்றைய இந்தியாவில் உள்ள காளிபங்கான், லோத்தல், ராகி கர்கி, தோலாவிரா, போன்ற நகரங்களும், இன்றைய பாகிஸ்தானிலுள்ள ஹரப்பா, கநேரிவாலா, மொகேஞ்சதாரோ போன்ற நகரங்களும் பழமைவாய்ந்த நாகரிகம் கொண்டிருந்த நகரங்களாக இருக்கின்றன.இந்த நாகரிகத்தில் நகரங்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன; சாலையோரங்களில் கழிவுகுழாய் அமைப்புகளும் பல மாடிக்கட்டிடங்களும் இந்த நகரங்களில் இருந்தன.