பிரான்சுக்காரர்கள் இந்தியாவிற்கு புதியவர்களாக வந்தவர்கள். பிரான்சு கிழக்கிந்திய கம்பனி 1664 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, இந்தியாவில் தாங்கள் வணிகம் செய்வதற்கான அனுமதியை ஔரங்கசீப்பிடமிருந்து பிரான்சு அதிகாரிகள் 1666 ஆம் ஆண்டு பெற்றனர். கோரமண்டல கடற்கரைப் பகுதியில் உள்ள பாண்டிச்சேரியில் பிரான்சுக்காரர்கள் தங்கள் வணிக நிலையங்களை அமைத்தனர். 1739 ஆம் ஆண்டு காரைக்கால் பகுதியை கைப்பற்றியதன் மூலம் ஜோசப் ஃப்ரான்கோஸ் டூப்லெக்ஸ் பாண்டிச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஐரோப்பாவில் ஆஸ்திரிய உரிமைக்கான போர் 1740 ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் விளைவாக இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர் மற்றும் பிரான்சு வீரர்களுக்கு இடையே சண்டை மூண்டது. கோரமண்டல கடற்கரைப் பகுதியில் இரண்டு நாட்டின் கடற்படைகளும் பல்வேறு சண்டைகளில் ஈடுபட்டனர். லா போர்டோனைஸ் (La Bourdonnais)தலைமையில் வந்த பிரான்சு படையினர் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையை 1746 ஆம் ஆண்டு தாக்கி தங்கள் வசமாக்கிக் கொண்டனர். இந்த போரில் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டவர்களில் ராபர்ட் க்ளைவ் என்பவரும் ஒருவர். ஐரோப்பாவில் நடைபெற்ற போர் 1748 ஆம் ஆண்டு முடிவடைந்தது. ஆக்ஸ்-லா-சாப்பள் அமைதி (Aix-la-Chapelle) உடன்படிக்கையின் படி மதராஸ் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆங்கிலேயருக்கும் பிரான்சுக்காரர்களுக்கும் இடையே இருந்த இராணுவச் சண்டை முடிவுற்று அரசியல் ரீதியான சண்டைகள் தொடங்கியது. பிரான்சுக்காரரிடம் மிகவும் பற்றுதலுடன் இருந்த கர்நாடகத்தின் நவாப் மற்றும் ஐதராபாத் நிசாம் ஆகிய இரண்டு பதவிகளும் ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டது. டூப்லேக்ஸின் ஆதரவுடன் சந்தா சாகிப் கர்நாடகத்தின் நவாப் பொறுப்பேற்றார். இந்தப் பகுதியை முதலில் ஆட்சி செய்த முகம்மது அலி கான் வாலாஜா என்பவருக்கு ஆங்கிலேயர் ஆதரவு கொடுத்தனர். ஆற்காடு பகுதியில் இருந்த சந்தா சாகிப்பின் கோட்டையை தாக்குதல் செய்து ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொள்வதற்காக 1751 ஆம் ஆண்டு க்ளைவ் முகம்மது அலிக்கு உதவி செய்தார்.

க்ளைவ்வை ஆற்காடு பகுதியிலிருந்து வெளியேற்றும் சந்தா சாகிப்பின் முயற்சிக்கு பிரான்சுக்காரர்கள் உதவி செய்தனர். பிரான்சுக்காரகளுடன் ஆற்காடு இராணுவத்தினரும் இணைந்து போரிட்ட போதிலும் ஆங்கிலேயர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்தனர். பாரிஸ் ஒப்பந்தம் (1763) படி கர்நாடகத்தின் நவாப்பாக முகம்மது அலி முறைப்படி அறிவிக்கப்பட்டார். இந்த செயல்களின் விளைவாக 1765 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் விதமாக டெல்லி பேரரசு தீர்ப்பாணை ஒன்றை வெளியிட்டது.